Categories
மாநில செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போறீங்களா?… அப்போ இத படிங்க… அலர்ட்…!!!

ராஜபாளையத்தில் ஏடிஎம்களில் பணம் எடுத்து தந்து உதவுவது போல பலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

ஆனால் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சில மோசடிக் கும்பல்கள் ஏடிஎம்மில் பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராஜபாளையத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தந்து உதவுவது போல் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை திருமங்கலத்தில் எஸ் எஸ் ஐ ஒருவரிடம் பணமோசடி செய்த போது தேனியை சேர்ந்த தம்பிராஜ் சிக்கினார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு உதவுவது போல் நடித்து தம்பிராஜ் பண மோசடி செய்து வந்ததை அம்பலமாகியுள்ளது. அவரால் இனி ஏடிஎம் மையங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாதவர்கள் உறவினர்கள் யாரையாவது உடன் அழைத்துச் செல்வது மிகவும் நல்லது.

Categories

Tech |