ஏடிஎம் சென்று பணத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன என்று பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது வங்கி மோசடிகளும், ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏடிஎம் அல்லது பின் நம்பரை பயன்படுத்தி மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றன. வங்கி தரப்பில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். சமீப காலமாக வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி யாராவது ஏடிஎம் நம்பர், வங்கி கணக்கு எண், ஆதார் எண் போன்ற விவரங்களை கேட்டு மோசடி நடப்பதாக புகார் வருகின்றன.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:
ஏடிஎம்மில் இருந்து பணத்தை நீங்கள் எடுக்கும் போது முதலில் வரவேற்பு செய்தி வந்துள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
பணத்தையும் எடுத்தவுடன் வங்கியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு மெசேஜ் வருகிறதா? என்பதை சோதித்துக் கொள்ளவும்.
ஏடிஎம் பயன்படுத்தி பணத்தை எடுக்கும்போது தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம்.
வங்கி கணக்கு பற்றிய தகவல்கள் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
ஏடிஎம் பயன்படுத்தி பணத்தை எடுக்கும்போது எதுவும் சிக்கல் ஏற்பட்டால் அங்கு இருக்கும் பாதுகாப்பு காவலர் உதவியை நாடலாம்.
ஏடிஎம் நம்பரை உள்ளிட்டு அனைத்து தகவலையும் கொடுத்த பிறகு பணம் வரவில்லை வரவில்லை என்றால் அல்லது செய்தி திரையில் தோன்றவில்லை என்றால் அங்குள்ள பாதுகாப்பு காவலரிடம் தெரிவிக்கலாம். அல்லது அந்த வங்கியை தொடர்பு கொள்ளலாம்.
எஸ்பிஐ எச்சரிக்கை:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை வழங்கியுள்ளது. அதன்படி
ஏடிஎம் பணபரிவர்த்தனை ரகசியமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
ஏடிஎம் மிஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் போது கீபோர்டை கைகளால் மறைத்து கொள்ள வேண்டும்.
ஏடிஎம் PIN அல்லது ஏடிஎம் கார்டு குறித்த விவரங்களை யாரிடமும் பகிர கூடாது.
ஏடிஎம் கார்டில் பின் நம்பரை எழுதி வைக்க வேண்டாம்.
வங்கியில் இருந்து பேசுவதாக கூறிய கார்டு மற்றும் பின் விவரங்களை கேட்டு எஸ்எம்எஸ் இமெயில் அழைப்பு வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.
ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது அடிபட்டாலோ உடனடியாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும்.
பணபரிவர்த்தனை செய்யும் போது செல்போனில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் பணத்தை எடுக்க கார்டை யாரிடமும் கொடுக்க வேண்டாம்.