Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் வங்கிகளில் சென்று பணம் எடுப்பதை விட ஏடிஎம் சென்று பணம் எடுத்து எடுப்பது தான் அதிகம். இவ்வாறு இலவச பரிவர்த்தனையை தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.  இந்நிலையில் இலவச பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ரூபாய் 1 உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை ரூபாய் 20 கட்டணம் வசூலித்த நிலையில் 2022 முதல் ரூ.1 உயர்த்தப்பட்டு ரூபாய் 21 வசூலிக்கப்படும் என்றும், புதிய கட்டண உயர்வு 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி  வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |