இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பதற்கான விதிமுறையை மாற்றி உள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சிறப்பு எண் தேவைப்படும். அந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பின்பற்றப்படும் புதிய விதிமுறையை எஸ்பிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது.இந்த புதிய விதிமுறையின் படி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மற்றும் டெபிட் கார்டு பின் நம்பரை உள்ளிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பணம் எடுக்க முடியாது.