Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…. ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கும்பகோணம் வேப்பத்தூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. நேற்று இரவு அந்த ஏடிஎம் இயந்திரத்தைகடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சப்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு வருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |