Categories
மாநில செய்திகள்

ஏடிஎம் கார்டு இல்லாமல் ஷாப்பிங்….. இந்த ஆப் மட்டும் போதும்….. இது புதுசு கண்ணா….!!!!

ஏடிஎம் கார்டு இல்லாமல் மிகவும் எளிதான வகையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ஷாப்பிங் செய்பவர்கள் ஈசியாக பர்ச்சேஸ் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் எளிதில் சாப்பிங் செய்யமுடியும். இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. இது பிஎன்பி ஒன் என்ற சேவையை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஆப் வாயிலாக நாம் டெபிட் கார்டு இல்லாமல் ஷாப்பிங் செய்து கொள்ள முடியும். உங்கள் கையில் போன் மட்டும் இருந்தால் போதும் அந்த போனில் நீங்கள் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து வைத்திருந்தால் ஈசியாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம். கையில் எப்போதும் ஏடிஎம் கார்டை தூக்கி கொண்டு அலைய தேவையில்லை.

இந்த ஆப் மூலமாக டிஜிட்டல் டெபிட் கார்டு எப்படி பெறுவது?

முதலில் உங்கள் மொபைல் போனில் என்ற ஆப்பை டவுன்லோட் செய்து அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு லாகின் செய்து கொள்ள வேண்டும். அதில்  Debit Card பிரிவை தேர்வு செய்யவும். இப்போது ‘Request Virtual Card’  என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். உங்களது அக்கவுண்ட் நம்பர் மற்றும் டெபிட் கார்டு வகையை தேர்வு செய்யவும். பின்னர் சமிட் கொடுக்கவும். Virutal Card ஆக்டிவேட் செய்வதற்கு ஒப்புதல் கொடுத்தால் உங்கள் பாஸ்வேர்டை பதிவு செய்துகொள்ளலாம். இப்போது உங்களின் டிஜிட்டல் டெபிட் கார்டு ரெடியாகிவிடும். இந்த டெபிட் கார்டு மூலமாக ஷாப்பிங் மற்றும் இதர வேலைகளை முடித்துக் கொள்ளலாம். மேலும் எலக்ட்ரிக் பில் கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கும் டிஜிட்டல் டெபிட் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம் .

Categories

Tech |