Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை வரம்பு உயர்வு…. புதிய விதிமுறைகள் அமல்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ரக டெபிட் கார்டு பரிவர்த்தனை வரம்புகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதாவது மாஸ்டர் கார்டு, விசா கோல்ட், ரூபே ரக பிளாட்டினம் டெபிட்கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தினசரி ஸ்வைப்பிங் மிஷின்களின் பயன்படுத்துவதற்கான வரம்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் ரூபே செலக்ட் மற்றும் விசா சிக்னேச்சர் டெபிட்கார்டு களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை உச்சவரம்பு 50,000 ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களின் டெபிட் கார்டுக்கான பின் நம்பர் மற்றும் ஓடிபி பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |