Categories
தேசிய செய்திகள்

“ஏடிஎம் கார்டு விதிமுறைகள் மாற்றம்”….. புது ரூல்ஸ் இதுதான்….. எல்லோரும் தெரிஞ்சுக்கோங்க…..!!!!

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது ஒடிபி வரம்பை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஒடிபி தேவையில்லை. 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு மட்டும் ஒடிபி அவசியமாக இருந்தது.

இப்போது ஒடிபி தேவைக்கான வரம்பை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி தேவையில்லை. 15 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஒடிபி கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை உடனடியாக அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எழுதுவதற்காக ஒடிபி தேவைக்கான வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

Categories

Tech |