Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான  முக்கிய குற்றவாளிகள்  இருவர் திருவள்ளுவரில் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஏடி.எம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர்  கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளிகளில் இருவரை  காவல்துறயினர் தேடி வந்த நிலையில் அவர்கள் காஞ்சிபுரத்தில்  பதுங்கி இருப்பது தெரிய வந்தது.  இதை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அடுத்த  கைவண்டுர் என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து திருவள்ளூர்  எஸ்பி அரவிந்தன், காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்ரியா தலைமையிலான  நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது முக்கிய குற்றவாளிகள் வாஷிங் மற்றும் ஹாசன் ஆகியோர் லாரியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும்  கைது செய்த காவல் துறையினர்  கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |