Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் பின் நம்பர் பெற…. இனி ஒரு போன் பண்ணா போதும்…. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி இருக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல சேவைகளை பெற எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு பின் நம்பரை பெறுவதற்கு புதிய திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ள இலவச எண்களுக்கு அழைப்பு விடுத்தால் போதும், ஈஸியாக வீட்டிலிருந்தபடியே ஏடிஎம் டெபிட் கார்டு பின் நம்பரை பெறமுடியும். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டெபிட் கார்டு பின் அல்லது கிரீன் பின் எண்களை பெறுவதற்கு நாங்கள் வழங்கும் ஈஸியான வழி. 1800112211 அல்லது 1800 425 3800 ஆகிய இலவச எண்களுக்கு அழைப்பு விடுத்தால் போதும்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |