பஞ்சாப் நேஷனல் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ATM-களில் பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தப் போகிறது. ஹை-எண்டு டெபிட் கார்டுக்கான அதிகபட்ச டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையை மாற்றுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தன் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி தன் இணையதளத்தில், வாடிக்கையாளர் மாஸ்டர் கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ATM பணம் எடுக்கும் வரம்பு ரூபாய்.50,000 முதல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். பிஓஎஸ் வரம்பு ரூபாய்.1,25,000ல் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கும்.
விசா சிக்னேச்சர் டெபிட்கார்டுகள் மற்றும் ரூபே செலக்ட் கார்டுகளுக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூபாய். 50,000 முதல் ரூ. 1,50,000 அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப், பிஎன்பி ATMகள், ஐவிஆர் (அ) அடிப்படைக் கிளைக்குச் செல்வதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் அதிக அளவில் டிரான்ஸாக்ஷன்கள் செய்துகொள்ளலாம் என வங்கி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வங்கி தன் வாடிக்கையாளர்களை டெபிட்கார்டு மற்றும் யூபிஐ பின் நம்பரை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் தினசரி பணத்தை எடுக்கும் அளவு ரூபாய்.25,000, ஒரு முறை பணம் எடுக்கும் வரம்பு ரூபாய்.20,000 மற்றும் தினசரி பிஓஎஸ் டிரான்ஸாக்ஷனுக்கான வரம்பு ரூபாய்.60,000 ஆகும். அதே நேரம் இந்த வரம்பு ரூபே மற்றும் மாஸ்டர் கிளாசிக் டெபிட்கார்டு பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். கோல்ட் டெபிட்கார்டு வைத்திருப்பவர்களுக்கு தினமும் மற்றும் ஒருமுறை பணம் எடுப்பதற்கான வரம்புகள் முறையே ரூபாய்.1,25,000 மற்றும் ரூ.20,000 ஆகும். அத்துடன் தன் வாடிக்கையாளர்களுக்கு சில விழிப்புணர்வையும் வங்கி வழங்கி இருக்கிறது.
அந்த வகையில் மோசடி கும்பல்கள் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு RBI, வருமான வரி, வங்கி ஊழியர்கள் பேசுவதாக சொல்லி பின் நம்பர் (அ) ஓடிபி போன்ற தகவல்களைப் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர். இது போல அழைப்போ (அ) செய்தியோ வந்தால் வாடிக்கையாளர்கள் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவுறுத்தியுள்ளது.