Categories
உலக செய்திகள்

ஏணியில் இறங்கும் போதே சி.பி.ஆர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய வீரர்..! வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ காட்சிகள் ..!!

தீ விபத்தில் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணியில் இறங்கிக் கொண்டிருக்கம் போது சி.பி.ஆர் செய்து உயிர் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2002 மார்ச் 9 ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சற்று நேரத்திலேயே அங்கு வந்தனர்.அந்த வீடியோ வைரலாகி வருகிறது .அதில் தீயணைப்பு வீரரான பாப் ஸ்வீக் முதல் மாடியில் அறைக்குள்  ஏணி  போட்டு ஏறி ஜன்னல் வழியாக உள்ளே சென்ற சில நொடிகளில் சில மாதங்களே ஆன கைக்குழந்தையை தூக்கி வருகிறார்.

அப்போது ஆக்சிஜனை நன்றாக சுவாசித்துக் கொண்ட மற்றொரு தீயணைப்பு வீரரான ஸ்காட் லெவிஸ்  குழந்தையை ஏணியில் வாங்கி கொண்டு இறங்கும் போதே சி.பி.ஆர் கொடுத்து குழந்தைக்கு மூச்சு வர வைத்தார். இந்த வீடியோ தற்போது 19 வருடங்களுக்கு பிறகு வைரலாக பரவி வருகிறது .

Categories

Tech |