மும்பையைச் சேர்ந்த பிரனாலி(20) என்ற பெண் 27 வயதான வாலிபர் ஒருவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருவரும் திரும்பியுள்ளனர். அப்போது பிரணாலி தனது காதலன் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை அந்த வாலிபர் ஏற்காமல் வீட்டுக்கு செல் என்று கூறி அனுப்பியுள்ளார் .இதனால் கிளம்பிய பிறகு பிரனாலி மீண்டும் தன்னுடைய காதலனுக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார்.
ஆனால் அப்போதும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து அந்த பெண் போன் செய்ததால் வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் தனது காதலியை அந்த வாலிபர் பிளாக் செய்துள்ளார். இதனால் தொடர்ந்து காதலனை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் பிளாக் செய்ததை அறிந்த காதலி காதலன் வீட்டிற்கே சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் வேறு வழி இல்லாமல் தன்னுடைய வீட்டிலேயே தங்கி கொள்ளும்படி கூறிவிட்டு, அந்த வாலிபர் வெளியே சென்று விட்டு காலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது காதலி தன்னுடைய துப்பட்டாவால் காதலன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனால் அந்த வாலிபரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர் .இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.