பொறுப்பில்லாத துணிச்சல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஓர் உதாரணம் தான் மும்பையில் நடந்த இந்த விபத்து. மின்சார ரயில் பெட்டியின் கதவு மூடப்பட்டிருக்க, வெளிப்புறத்தில் தொற்றிக் கொண்டு பயணித்த 18 வயது இளைஞர், சற்றே அசந்தபோது எதிர்வந்த மின்கம்பம் இடித்து அப்படியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிர் தப்பினாலும், படுகாயங்களுடன் தீவிரச் சிகிச்சை பெற்றுவருகிறார். இனி அவரால் இயல்பாக நடமாட முடியுமா? சில நிமிட சாகசத்துக்கு வாழ்க்கையை பணயம் வைக்கலாமா? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/MrSinha_/status/1540275195046285313