பிக்பாஸ் பிரபலம் ஜித்தன் ரமேஷ் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் நடிகர் ரமேஷ் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ஜித்தன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. இதன்பின் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜித்தன் ரமேஷ் கொரோனா காலத்தில் பணியாற்றிவரும் காவல் துறை ஊழியர்களுக்கும் சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், மாஸ்க், சானிடைசர் போன்ற பொருட்களை வழங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஏதோ என்னால் முடிந்தது. நீங்களும் வாருங்கள். இந்த தொற்றுநோயை ஒன்றாக வெல்லலாம்’ என பதிவிட்டுள்ளார். ஜித்தன் ரமேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.