Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன்டா இப்படி குடிச்சிட்டு வர… வன்மையாக கண்டித்த அம்மா,அக்கா… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

மதுரை மாவட்டத்தில் மது அருந்தியதை அம்மா கண்டித்ததால் வாலிபர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி மற்றும் சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் கோபிநாத் என்ற இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் விவேக் பாண்டியன் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகின்றார். ஆனால் அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால், குடித்துவிட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போலவே குடித்து விட்டு வீட்டிற்கு வந்த விவேக் பாண்டியனை அவரது அம்மா மற்றும் அக்கா கண்டித்துள்ளனர்.

அதனால் மனமுடைந்த அவர் வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து தன் வயிற்றில் தானே சரமாரியாக குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |