Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இங்கு வந்தார்….? பள்ளி மாணவி தற்கொலை வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்களம் பசுபதி நகரில் இருக்கும் தனியார் கட்டிடத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி திருவான்மியூர் பகுதியை சேர்ந்த திவ்யதர்ஷினி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி எதற்காக குலமங்களத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |