Categories
அரசியல்

“ஏன் இதுவரை ஓபிஎஸ்சை கைது செய்யவில்லை”…? கேள்வி எழுப்பிய அன்பழகன்…!!!!!

புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாநில செய்தியாளர் அன்பழகன் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஜாதி மதம் ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களே கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது இது கண்டிக்கத்தக்கதாகும். எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே புகுந்துள்ளார். அடித்து உடைத்து அங்கிருந்து சொத்து பத்திரங்கள் விலைமதிப்பில்லா பொருட்களை திருடி சென்றனர்.

மேலும் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடந்த விசாரணையில் திருடப்பட்ட 112 பொருட்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் திருட்டு புகாருக்கு ஆளான ஓபிஎஸ் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் என யாரையும் தமிழக காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இதன் மூலமாக திமுகவின் சதி செயல் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது. மேலும் கழகத்தை அளிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போவார்கள். கழகத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்யும் துரோகிகளை கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் துவேசம் செய்வார். தமிழகத்தில் தொடர்ச்சியான பெட்ரோல் கொண்டு வீச்சால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் தமிழகத்தை உற்றுநோக்கும் நிலையை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி விட்டார்.

காரைக்காலில் ஒரு வாரத்திற்கு முன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும் அமைதியை சீர்குழக்கும் விதத்தில் யார் தவறு செய்தாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது காவல்துறையினர் கடமையாகும். அதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிரவாத செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்காணிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் அது டிஜிபி தலைமையில் இயங்க வேண்டும். மேலும் இது சம்பந்தமாக துணை நிலை ஆளுநரும் முதல்வரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நமது மாநிலத்தில் அமைதியை கெடுக்கும் எந்த சக்தியும் சிறிதளவு இடம் கொடுக்கக் கூடாது என அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |