பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ் . இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் வந்துகொண்டே இருக்கிறது . திடீரென சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் பாலாஜி சட்டென்று கோபப்பட்டு விடுவார் . பின்னர் வார இறுதியில் மன்னிப்பும் கேட்டு விடுவார். நேற்றைய எபிசோடில் கூட ஆரியை பற்றி குறை கூறிக் கொண்டிருந்த பாலாஜி தற்போது சட்டென்று மனம் மாறியுள்ளார் . இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பாலா ‘நான் ஆரி மற்றும் ரியோவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
#Day75 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/e8HgP2lS6a
— Vijay Television (@vijaytelevision) December 18, 2020
இதுவரை நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை பார்த்த பின் இந்த நிலைமைக்கு வந்திருப்பீர்கள். ஆனால் நான் இனிமேல் தான் பார்க்கப் போகிறேன். எனக்கு அந்த அளவுக்கு தகுதி இருக்குதான்னு தெரியவில்லை . ஒருத்தர கை கொடுத்து தூக்கி விடுவதை விட்டுவிட்டு கீழே, இழுத்து விடுற மாதிரி எனக்கு தோணுது . அதனால இந்த இரண்டு பேரிடமும் சாரி கேட்டுக்கிறேன்’ என்று கூறுகிறார். இந்த முறை பாலாஜியின் மனமாற்றம் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்று பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.