பள்ளி நிலத்தை ஆக்கிரமித்ததை பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரணம் கிராமத்தில் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதனை அகற்ற கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.