தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் ஏ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீட்டுமனை வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் நிர்வாகி தங்கராஜ், வெங்கடேசன், சுப்பிரமணி, ஏ.ஆரிப்,ரசூல்,செய்யது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.