சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில் மற்றவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதை மு க ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தம் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். சவாலுக்கு உரிய பதில் சொல்ல முடியாத ஸ்டாலின் நேருவை வைத்து தரம் தாழ்ந்த விதத்தில் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக விமர்சித்துள்ளார். முதல் தளத்தில் தன் தாயையும், தங்கையையும் சிபிஐ விசாரணை செய்துகொண்டிருந்தபோது விசாரிக்க உத்தரவிட கட்சியோடு தரைதளத்தில் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலினை வைத்துக்கொண்டு நேரு, வெட்கம், மானம் குறித்து பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
123 தேசிய விருதுகள்:
திருச்சியில் தில்லைநகர் தொடங்கி ஒட்டுமொத்த சோழநாட்டையும் ஊழல் பணத்தாள் வளத்து விட்டு இப்போது உச்ச நீதிமன்றத்தில் தலைப்பு தலை தப்புமா என தவம் கிடைக்கும் ஊழல் பேர்விழி நேரு என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். நேருவுக்கு பூவாளூர் அரிசி ஆலை தொடங்கி சென்னை, கோவை என தமிழகம் கடந்து இந்தியா முழுவதும் குவிந்துகிடக்கும் சொத்துக்கள் வந்த கதையெல்லாம் உலகமே அழியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி துறையில் 123 தேசிய விருதுகளை பெற்றுத் தந்தவர் உள்ளாட்சி அமைச்சர் எஸ் பி வேலுமணியை விமர்சிக்கும் அருகதை ஸ்டாலினுக்கும் கிடையாது, நேருவுக்கும் கிடையாது என்றும் விமர்சித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு அருகதை:
ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறையில் அவர் ஆற்றிய சாதனைகள் குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி யுடன் துண்டு சீட்டு துணையில்லாமல் விவாதிக்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இருக்கிறதா ? என்றும் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். திறமை வாய்ந்த ஒரு நேர்மையான தலைமை பொறியாளரின் நல் நோக்க நியமனத்தை கொச்சைப்படுத்த முயற்சிப்பது தான் தான் திருடி பிறரை நம்பான் என்பதை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பார்த்தால் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுகவை இன்று ஸ்டாலின் வழிநடத்துவதற்கு அருகதை இருக்கிறதா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடுப்பு இடுப்பு மேலே பொங்குகிறது:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இனி அதிமுக அவ்வளவுதான்… ஆளில்லா அரசியல் மைதானத்தில் கோல் போட்டு விளையாடலாம் என்று கனா கண்ட ஸ்டாலினின் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்ததில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கும், மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை நினைக்கும் போது ஸ்டாலினுக்கு கடுப்பு இடுப்பு மேலே பொங்குகிறது என்றும் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.அதனால்தான் தொடர்ந்து வன்மத்தோடு தங்கமணி, வேலுமணி என்று தூக்கத்திலும் திருவாளர் துண்டுச்சீட்டு புலம்புகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை முடிசூட வைப்பது சத்தியம்:
மாற்று மணல் திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஸ்டாலின் புரியாமல் அறியாமல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்த மீத்தேன் ஒழிப்பு, மின் மிகை மாநிலமாக தமிழகம் ஜொலிப்பு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக படுகை விவசாயப் பகுதி அறிவிப்பு, அத்திக்கடவு அவினாசி திட்டம், 11 மருத்துவ கல்லூரிக்கு ஒரே மாதத்தில் ஒப்புதல், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, கரிகாலன் காலத்தை கண்முன்னே நிறுத்தும் குடிமராத்து பணிகள் என்றெல்லாம் சாமானியர்களின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்த்தி வரும் சரித்திர சாதனைகள் 2021 ஆம் ஆண்டிலும் மூன்றாவது முறையாக அதிமுகவை முடிசூட வைப்பது சத்தியம் என்பது முக ஸ்டாலினுக்கு முன்கூட்டியே தெரிந்து விட்ட காரணத்தால், உதறல் எடுத்து உளறுகின்றர் என்றும் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ஆதாரமற்ற குழப்ப அறிக்கை:
குறிப்பாக கொரோனாவுக்கு எதிராக அல்லும், பகலும் அயராது உழைத்துவரும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு, கொரோனா பரவலுக்கு விரைவில் முடிவு கட்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னோட்டமாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை உருவாகி வருகிறது என்பதை காணப் பொறுக்காத ஸ்டாலின் அதனை குலைப்பதற்கு அறிக்கை எனும் பெயரில் அரசியல் அருவருப்பை செய்து வருவதாக விமர்சித்துள்ளார். இதேபோன்று மக்களிடம் அரசு நற்பெயர் எடுக்கும் போதெல்லாம் மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற குழப்ப அறிக்கைகளை வெளியிடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டாலின் பிதற்றுகிறார்:
கொரோனா காலத்தில் கோழி கூவுகிறதோ இல்லையோ கொரோனாவை மையப்படுத்தி ஏதாவது வெட்டி அறிக்கை வெளியிட்டு காலை முதல் மாலை வரை பித்து பிடித்தவர் போல் பிதற்றுவதையே ஸ்டாலின் வாடிக்கையாகவும் வைத்துள்ளார் என்று ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். திருவாரூரில் ரயில் டிக்கெட் எடுக்க கூட நாதியின்றி திருட்டு ரயிலேறி சென்னை வந்த ஸ்டாலின் குடும்பத்தினர், பொதுவாழ்க்கைக்கு வந்து இன்று உலக பணக்காரர்களோடு போட்டி போடும் அளவுக்கு இத்தனை கோடிகள் குவித்து எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதற்கும் உதவாத குரோட்டன்ஸ் செடி:
அதிமுகவினர் ஏழை மக்களுக்கான பயன்படுகின்ற கீரைத்தோட்டம் என்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் ரகசிய சிகிச்சைக்கு லண்டனுக்கும், சிகை அலங்காரம் செய்து கொள்ள தாய்லாந்துக்கும் பறக்கும் செயல் ஏழைகளுக்கு மட்டுமல்ல, எதற்கும் உதவாத குரோட்டன்ஸ் செடி என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். இதனை போக்குவரத்து துறையையே கொள்ளையடித்து அதனை காய்லாங்கடையாக மாற்றிய கே.என் நேரு உணர்ந்து கொள்வது உத்தமம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.