பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீளபசலை கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வேளாண் கூட்டுறவு வங்கிகள் அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் தங்க நகைகளை அடகு வைத்த பயனாளர்களுக்கு தள்ளுபடி கொடுப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி பெற்ற 54 பயனாளிகளில் 24 பயனாளிகளுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களுக்கும் என வசதி அதிகமாக உள்ளவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வேளாண் கூட்டுறவு வங்கியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.