உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அரசியல் பணி, திரையுலகில் எனக்கு ஏதேனும் இலக்கு உள்ளதா ? என்று கேள்வி கேட்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை, எனது வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின் படி என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறேன் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும். உங்களுக்கு வழி பிறக்குமா ? என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஏன் ? ஏற்கனவே எனக்கு நல்ல வழிதானே இருக்கிறது. அதில் என்ன குறையை கண்டீர்கள் ? என திருப்பி கேட்க செய்தியாளர்கள் வாயடைத்து நின்றனர்.