Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை காதலிக்க மாட்டாய்…?? மாணவியை தாக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் இருக்கும் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சூரிய பிரகாஷ் என்ற மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்காததால் சூரிய பிரகாஷ் அவரை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது ஏன் என்னை காதலிக்க மாட்டாய்? எனக் கூறி சூரிய பிரகாஷ் தகராறு செய்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சூரிய பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |