Categories
தற்கொலை மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த…? கண்டித்த காதல் மனைவி…. கணவன் எடுத்த முடிவு….!!

மது குடித்ததை காதல் மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாதபுரம் தக்கலை அருகே திருவிதாங்கோடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினமணி (வயது 38), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த குமாரி (33) , என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் அவரது வீட்டில் மது அருந்தி உள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இந்நிலையில் ரத்தினமணி வாந்தி எடுத்த நிலையில் வீட்டில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி குமாரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து சிகிச்சையில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரத்தினமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரத்தினமணி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனாலும் ரத்தினமணி தற்கொலை தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |