Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏன் கேக்கல…. ஆக்ரோஷத்தில் “தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை பிடித்த ரோஹித்”….. என்ன நடந்தது?…. வைரல் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி  3 டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில்  நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 71* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) 46 ரன்கள் எடுத்தனர்..

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து வென்றது. கிரீன் அதிரடியாக 30 பந்துகளில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) 61 ரன்கள் எடுத்ததார். மேலும் ஸ்மித் 35 ரன்களும், மேத்யூ வேட் 21 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது..

இந்த போட்டியின் போது பிரபலமடைந்தது தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா இடையேயான விளையாட்டுத்தனமான சண்டை தான். அதாவது ஆட்டத்தின் 12வது ஓவரில் போட்டி இருந்தது, அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீச க்ளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்த போது தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு எட்ஜ் கொடுத்ததாகத் தோன்றியது. ஆனால் தினேஷ் கார்த்திக்குக்கு DRS க்கு செல்லலாமா வேண்டாமா என்று உறுதியாக தெரியவில்லை. ரோஹித் சர்மா ரிவியூவுக்குச் சென்றார்.

பின் பேட்டில் பட்டது தெளிவாக தெரிய மேக்ஸ்வெல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் குரூப்பாக அணி வீரர்கள் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க ரோஹித் தினேஷ் கார்த்திக்கிடம் பேசிக்கொண்டே விளையாட்டாக ஆக்ரோஷத்தில் கையால் அவரது கழுத்தை பிடித்து தாக்குவது போல சிரித்தார். பதிலுக்கு தினேஷ் கார்த்திக்கும் சிரித்தார்.. களத்தில் ரோஹித்தின் வேடிக்கையான செயல்கள் பேசுபொருளாக மாறியது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து கலாய்த்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/cricketpun_duh/status/1572261345902612482

Categories

Tech |