Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சமைக்கல…. மயங்கி விழுந்த மனைவி…. பயத்தில் தூக்கில் தொங்கிய கணவன்…. பின் நடந்த சம்பவம்..!!

விருத்தாச்சலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகில் கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் 28 வயதுடைய தொழிலாளி வீரமணி. இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயசாந்தி, விருத்தாச்சலத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சென்று விட்டு வந்ததால் வீட்டில் சமைக்காமல் இருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வீரமணி, விஜயசாந்தியிடம் எதற்கு சமைக்கவில்லை என்று கேட்டார். அதன் பின் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வீரமணி, விஜயசாந்தியை அடித்துள்ளார். அதனால் விஜயசாந்தி மயங்கிக் கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமணி, விஜயசாந்தி இறந்துவிட்டதாக நினைத்து அவரது உறவினர்கள் தன்னை அடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு போட்டு கொண்டார்.

இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த பார்த்த விஜயசாந்தி, வீரமணி தூக்கில் தொங்குவதை பார்த்து கத்தி சத்தம் போட்டார். இவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. இப்புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |