Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏன் சேவையை சரியாக செய்யவில்லை?…. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது வந்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்….!!!!!

இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வாடிக்கையாளர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேந்திரனின் கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ராஜேந்திரன் காரை பழுது பார்க்க செலவழித்த 85 ஆயிரத்து 187 ரூபாய் பணத்தை தான் இன்சூரன்ஸ் செய்த காப்பீட்டு நிறுவனத்தில் கேட்டு மனு அளித்துள்ளார். ஆனால் நிறுவன அலுவலர் காரை ஆய்வுசெய்து 52 ஆயிரத்து 299 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என  தெரிவித்தார். ஆனால் இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனம் எந்த ஒரு தொகையும்  வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல்  செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைவர் கோபிநாத், உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் கொண்ட குழு  ராஜேந்திரனுக்கு  1 லட்சத்து 20 ஆயிரத்து 187 ரூபாய் பணத்தை 9 சதவீதம் வட்டியுடன்  தலைமை இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சிதம்பரம் இன்சுரன்ஸ் கிளை ஆகிய 2 பேரும் சேர்ந்து வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.

Categories

Tech |