Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?… சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயி சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் வைத்து மாதம்தோறும் விவசாயிகள்  குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விவசாயியான ராமன் என்பவர் சவக்குழிக்குள் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ராமன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |