மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கண்ணன் பல முறை வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்கும் முயன்றுள்ளார்.
அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.