மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகராட்சியில் தற்காலிகமாக சுகாதார பணியாளராக பணிபுரியும் நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நந்தினி தனக்கு நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு பாலியல் சொல்லை கொடுத்ததாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் பாபு விசாரணைக்கு வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஸ்டாலின் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு நந்தினி தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.