கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்குடல் கீழ்பாதி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக மின் மோட்டார் பழுதடைந்ததால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள் சாத்துக்கூடல் பெண்ணாடம் சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.