தனுஷ் நடிகைகளுடன் இருக்கும் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரசிகர்கள்.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இவர்கள் 2004-ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்போது திடீரென இவர்கள் பிரிவதாக சொன்னது உறவினர்கள் மற்றும் நட்புகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து வாழும்படி கூறிவருகின்றனர். உங்களுக்காக இல்லை என்றாலும் உங்களின் குழந்தைகளுக்காக வாழவேண்டும் என கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினி ஐஸ்வர்யாவின் மீது கோபப்பட்டதால் ஐஸ்வர்யா மனம் இறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ்வதாக மனம் மாறியிருக்கிறார்.
ஆனால் தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகுதான் நான் மிகவும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாக கூறியிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுடன் க்ளோஸாக இருப்பது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது என கூறப்படுகின்றது. இதற்கு தனுஷ் கூறுவதாவது, சினிமா துறையில் இருக்கும் அனைவருமே எல்லோரிடமும் நெருங்கி பழகுவார்கள். இது சாதாரணமான ஒன்று. இதற்கெல்லாம் சண்டை போட்டால் என்ன செய்வது என கேட்கிறாராம். இந்நிலையில் இவர் நடிகைகளுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை சில ரசிகர்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.