Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் பாலம் அமைக்க வில்லை?…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓடும் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே  பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த தரைப்பாலம் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம  மக்கள்  அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக புதிய பாலம் அமைக்க வேண்டும் என கூறி  திண்டுக்கல்-நத்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன்,  ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், ஊராட்சி செயலாளர் வெற்றிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது  நேரம்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |