தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது.
பொங்கல் பரிசாக ஏன் ரூ.5,000 தரவில்லை. போனால் போகட்டும் என்று ரூ. 1000 தருகிறார்கள். உங்க வீட்டு பணத்தையா எடுத்து கொடுக்குறீங்க? நாடாளுமன்ற தேர்தல் வரும் காரணத்தால்தான் ரூ.1000 கூட தருகிறார்கள் என்று ஆவேசமாக விமர்சித்தார்.