Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் வழங்கவில்லை?…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. விருதுநகரில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இன்னிலையில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதில் ஒரு வாரத்திற்குள் 40 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிர் காப்பீட்டு தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு அனுப்ப  நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |