வாடகை செலுத்தாத இரண்டு கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான பல கடைகள் உள்ளது. அந்த கடைகளை ஏராளமான வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளின் உரிமையாளர்கள் வாடகையை செலுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை 2 கடைகளின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. இதனால் நகராட்சி மண்டல இயக்குனர் சரவணன் கடைகளை பூட்டி சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன், மேலாளர் ராஜேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பெட்டிகடை, வாகனம் பழுது நீக்கும் கடை என 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு அதிகாரிகள் துண்டித்துள்ளனர். மேலும் இது போன்று கடை வாடகை செலுத்தாத கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் வந்து கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும்,இல்லையென்றால் அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்