Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏன் விஜய் மாதிரி பண்ற”…. அப்போ விஜய் நடிக்க வரவில்லை…. இயக்குனரிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகர்….!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என விஜய்யின் படங்கள் செய்யும் வசூல் சாதனை குறித்து அனைவரும் தெரிந்ததே. ஆனால் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டு இருக்கிறது.

 

 

 

மேலும் வாரிசு திரைப்படத்தின் முதல் பார்வையும் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய்யுடன் நடிக்க பல இளம் நடிகர் மற்றும் நடிகைகள் ஆவலாக இருக்கிறார்கள். அதில் சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர்தான் நடிகர் ஜெய். பகவதி படத்தில் அறிமுகமான ஜெய் அந்த படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, கலகலப்பு-2 என பல வெற்றி படங்களில் நடித்து பிரபல கதாநாயகனாக வலம் வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறியிருக்கிறார். சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் படமானதிரைப்படம் சுப்பிரமணியம்.

இந்தப் படம் நடிகர் ஜெய்க்கும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஜெய் நடைபாதை நடிப்பு என அனைத்தும் விஜய் போலவே இருந்ததது. அதனால் இயக்குனர் சசிகுமார் ஏன் விஜய் மாதிரி பண்ற. நம்ம படம் 80 காலகட்டத்தில் நடப்பது போன்று படமாக்கப்பட்டு  வருகிறது. அந்த காலத்தில் விஜய் நடிக்க வரவில்லை என ஜெய்யை திட்டியுள்ளார். ஆனால் அதற்கு ஜெய் நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை அதுவாக வருகிறது என கூறிய கூறினாராம். மேலும் விஜயுடன் பகவதி படத்தில் நடித்ததால் அவரை பார்த்து பார்த்து அவரது ஸ்டைல் தன்னிடம் ஒட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். விஜய் வில்லனாக நடித்து சுந்தர் சி ஹீரோவாக நடித்திருக்கும் பட்டாம்பூச்சி திரைப்படம் ஜூன் 24ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |