பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் வைத்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தலைவர் குலசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரயில்வே, விமான போக்குவரத்து துறை என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்து வருகிறது.
தற்போது கடைக்கோடி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எஸ் .ஐ .சி. யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் இதனால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் காப்பீட்டு கழக ஊழியர்கள், அதிகாரிகள், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.