Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு போகாம இருக்க…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் திட்டியதற்காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் ஆலங்குடி கிராமத்திலுள்ள மேலத்தெருவில் காவியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்ததால் அவரது தாய் ஏன் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிகிறாய் என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காவியன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்ட காவியனின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காவியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |