செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலை தனது வாட்ச்சின் ரசீதை காட்ட வேண்டும் என்று கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது ட்வீட்டில், “பில் இருக்கிறதா இல்லையா எனும் ஒற்றை கேள்விக்கு ஆம், இல்லை என்ற பதிலை விட்டு, ஏப்ரலில் பில் வரும். மேயில் வெயில் வரும் என்று அளப்பதை பார்த்தால் ‘அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்’ காமெடி போலவே இருக்கிறது” என்று அண்ணாமலையை கலாய்த்துள்ளார் செந்தில்பாலாஜி.