ஏப்ரல் மாதம் முதல் 5 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது: வரும் “ஏப்ரல் மாதம் முதல் 5 முதல்11 வயதினருக்கு தடுப்பு ஊசி செலுத்த இருக்கிறோம்.
அடுத்து வரக்கூடிய காலகட்டங்களில் தொற்றில் இருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க விரும்பும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார். ஏற்கனவே 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களில் 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக சுமார் 6 லட்சம் சிறுவர்கள் தடுப்பூசி தகுதியை பெற்றுள்ளனர் என கூறினார்.