Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல்-1 ஆம் தேதி முதல்…. வாகனங்களுக்கு இது கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…!!!

 அனைத்து வாகனங்களுக்கும் பிட்னெஸ் டெஸ்ட் என்பது   கட்டாயம்   என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இயந்திரங்களின் உதவியுடன் ஒரு வாகனம் இயங்குவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்வது ஆட்டோமேடட்  சிஸ்டம் ஆகும். சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும்  அதிக புகையை வெளியிடும்  வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதிகப்படியான புகை ஒருசில வாகனங்களிலிருந்து தள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இதன் காரணமாக  ஆட்டோமேடட் சிஸ்டம்  மூலம் வாகனங்களின் ஃபிட்னஸ் தகுதியை சோதித்து பார்ப்பதற்கான வரைவு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல்அமலுக்குவருகிறது. மேலும்  கனரக வாகனங்கள்  மற்றும் பாசஞ்சர் வாகனங்களுக்கு பிட்னஸ் டெஸ்ட் எடுப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் நடுத்தர ரக சரக்கு வாகனங்கள், பேசேன்ஜ்ர்  வாகனங்கள் மற்றும்  இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கு 2024 ஜூன் 1 ம்  தேதி முதல் பிட்னெஸ் டெஸ்ட்  கட்டாயம் என அறிவித்துள்ளது.

Categories

Tech |