தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். அதில் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.