ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஏப்ரல் 1-ம் தேதி ஒருவர் முட்டாளாக்கிய ஒரு சிறிய தொகுப்பு பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
கடந்த 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி லண்டனில் வசிக்கும் அனைத்து மக்களும் அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அதாவது வானத்தில் ஏலியன் தட்டு போன்ற ஒரு வாகனம் பறந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினரிடம் ஏலியன் தட்டு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறிது நேரத்தில் ஏலியன் தட்டு தரை இறங்கியது. அது தரையிறங்கும் போது தான் அது ஏலியன் தட்டு கிடையாது ஒரு பலூன் என்பது தெரியவந்தது. அந்தப் பறக்கும் தட்டு போன்ற வடிவத்தில் இருந்த பலூனில் இருந்து வெளியே வந்த நபர் பார்ப்பதற்கு ஏலியன் போன்று இருந்தார். அவர் தன்னுடைய முகத்தில் ஏலியன் போன்ற மாஸ்க்கினை அணிந்திருந்தார். அவர் லண்டனில் வசிக்கும் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான Richard branson ஆவார். இதுபோன்று ஏப்ரல் 1- ஆம் தேதியன்று யாரும் ஏமாற்றி இருக்க மாட்டார்கள்.