தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 7ஆம் தேதி இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Categories