நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் நந்துபார் மாவட்டத்தில் ஏப்ரல் 15 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மூவாயிரத்தை நெருங்கிய நிலையில் தேர்தலுக்கு பிறகு பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.