ஏப்ரல் 18 தேதி முதல் 14 மணிநேரம் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முழுவதும் ஏடிஎம் மையங்களையோ அல்லது வங்கிகளையோ நாடுவதில்லை. எனவே ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 18 தேதி முதல் 14 மணிநேரம் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்படுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் NEFT சேவைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.