Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லி போகும் முதல்வர் ஸ்டாலின்…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறது. அதனை திறந்து வைப்பதற்காக தமிழக தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லி செல்ல இருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த பயணத்தின்போது தேசியக் கட்சிகளின் முக்கியமான தலைவர்களை அவர் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் 3- வது டெல்லி பயணம் இது ஆகும். டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வருடம் ஜூன்மாதம் டெல்லிக்கு சென்ற போது தி.மு.க. அலுவலகத்தின் கட்டுமானம் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |